This Article is From May 23, 2019

இந்தியாவில் யார் வென்றாலும் இணைந்து பணியாற்றுவோம்: அமெரிக்கா

தேர்தல் 2019: மற்ற நாடுகளை போல தேர்தல் கணிப்பாளர்களை இந்தியாவுக்கு அனுப்பவில்லை காரணம் இந்தியா வலிமையான தேர்தல் ஆணையத்தை கொண்டுள்ளது.

இந்தியாவில் யார் வென்றாலும் இணைந்து பணியாற்றுவோம்: அமெரிக்கா

இந்திய தேர்தல் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அணுகுமுறைக்கு அடையாளமாக உள்ளது: மோர்கன்

Washington:

இந்திய தேர்தலில் யார் வென்றாலும் அவர்களுடன் இணைந்து நம்பிக்கையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் அமெரிக்கா செயல்படும் என்று அறிவித்துள்ளது.

அமெரிக்க செய்தி தொடர்பாளர் மோர்கன், "அமெரிக்க பார்வையின்படி நாங்கள் அதிக நம்பிக்கையுடனும், வெளிப்படையாகவும் செயல்படவுள்ளோம். தேர்தலில் யார் வென்றாலும் இந்த நிலைப்பாடுதான்" என்றார்.

மற்ற நாடுகளை போல தேர்தல் கணிப்பாளர்களை இந்தியாவுக்கு அனுப்பவில்லை காரணம் இந்தியா வலிமையான தேர்தல் ஆணையத்தை கொண்டுள்ளது.

"நாங்கள் வலிமையான உறவை இந்தியாவுடன் கொண்டுள்ளோம். இந்தியா சிறந்த நட்புநாடாக எப்போதும் இருந்துள்ளது" என்றார்.

"இந்திய மக்கள் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளனர். இந்திய தேர்தல் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அணுகுமுறைக்கு அடையாளமாக உள்ளது" என்று கூறினார்.

"உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்தியாவின் அணுகுமுறையை பொறுத்தி பார்க்க வேண்டியது அவசியம்" என்றார்.

.