General elections 2019: காங்கிரஸ் கட்சியின் “காவல்காரனே திருடன்” என்ற அர்த்ததை வெளிப்படுத்து, “சவுகிதார் சோர் ஹை” என்ற விளம்பரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது
New Delhi: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் “காவல்காரனே திருடன்” என்ற அர்த்ததை வெளிப்படுத்து, “சவுகிதார் சோர் ஹை” என்ற விளம்பரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
புதன்கிழமை தலைமை தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சவுகிதார் சோர் ஹை என்ற விளம்பரத்தை பயன்படுத்தக்கூடாது உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட வகையில் தாக்குவதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊழல்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “சவுகிதார்” என்று குறிப்பிட்டார்.
தலைமை தேர்தல் அதிகாரி மாநில ஆட்சியருக்கு கொடுத்த உத்தரவின்படி காங்கிரஸ் தன்னுடைய பிரசாரத்தில் இந்த விளம்பரத்தை நீக்க உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபின்னர் பிரசாரத்தின் போது தலைவர்கள் தங்களுடைய பேச்சில் கவனம் செலுத்த வலியுறுத்தி வருகிறது. மதவாத வெறுப்பு அரசியலை தூண்டும் வகையில் பேசிய மாயாவதி மற்றும் யோகி ஆதித்யநாத் இருவருக்கும் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரத்தை தெரிந்து அதை பயன்படுத்த வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தியது.