This Article is From Mar 27, 2019

சீட்டு தராததால் ஆத்திரம்: கட்சி ஆபிசில் 300 சேர்களை எடுத்துச் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.!!

அப்துல் சத்தார் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சி ஆபிசில் இருந்த சேர்கள் தான் வாங்கித் தந்தது என்று கூறி அவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.

சீட்டு தராததால் ஆத்திரம்: கட்சி ஆபிசில் 300 சேர்களை எடுத்துச் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.!!

அப்துல் சத்தாருக்கு வாய்ப்பளிக்காமல் சுபாஷ ஜம்பாத் என்பருக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது. 

Aurangabad:

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல் சத்தார் என்பவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சத்தார், கட்சி அலுவலகத்தில் இருந்த 300 சேர்கள், தான் அளித்தது என்று கூறி அவற்றை எடுத்து சென்று விட்டார். 

சிலோத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சத்தார் உள்ளார். சேர்கள் இல்லாததால் பின்னர் வேறு வழியின்றி கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

அவுரங்காபாத் மக்களவை தொகுதியில் சும்பாஷ் ஜம்பாத் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இது அப்துல் சத்தாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேர்களை எடுத்துச் சென்றது குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு சத்தார் அளித்த பேட்டியில், '' நான் எடுத்துச் சென்ற 300 சேர்களும் எனது சொந்த காசில் வாங்கித் தந்தவை. கட்சி கூட்டத்திற்காக அவற்றை அளித்தேன். இப்போது கட்சியை விட்டு போகிறேன். எனவே எனது சேர்களை எடுத்து செல்கிறேன். எங்களது தேர்தல் பிரசாரத்திற்கு அந்த சேர்களை பயன்படுத்துவோம்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து அவுரங்காபாத் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜம்பாத் கூறுகையில், ''சத்தாருக்கு சேர்கள் தேவைப்பட்டிருக்கும். அதனால் அவர் எடுத்தச் சென்றிருப்பார். இது எங்களுக்கு அதிருப்தியை அளிக்கவில்லை. அவர் கட்சியில்தான் உள்ளார். அவர் அளித்த ராஜினாமா கடிதம் இன்றும் ஏற்கப்படவில்லை'' என்றார்.

.