நாடெங்கும் பொது தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது (Representational)
Kolkata: அரசியல் கட்சிகளின் ஆன்லைன் விளம்பர செலவு 2014 ஆம் ஆண்டை விட இந்த மக்களவைத் தேர்தலில் ரூ. 400-500 கோடியிலிருந்து இரண்டு மடங்காக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் ஸ்மார்ட் போன் கலாச்சாரம் மற்றும் விலை குறைவான இண்டர்நெட் பேக்களினால் இணையம் வெகுவாக பிரபலமாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி டிஜிட்டல் உலகில் விளம்பரங்களை செய்ய அதிகளவில் செலவு செய்து வருகிறது.
2019 பொதுத் தேர்தல்களில் தேர்தல் பிரசாரங்களில் மொத்த விளம்பர செலவு 2,500-3,000 கோடிக்கு இடையே இருக்கும் என்கிறார் கிரேட்டர் சவுத் , டென்சுஸ் ஏஜிஸ் நெட்வொர்க்கின் சி இஓ ஆஸிஸ் பாஸன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் விளம்பர செலவுகள் ரூ. 500 கோடியாக இருக்கும் என்று திரு. பாசின் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.
பிரசாரத்திற்கான மனிதவளச் செலவையும் உள்ளடக்கியே இந்த செலவினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்க திட்டங்கள் குறித்தான விளபரங்களுக்கு செலவழிக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட்போனின் விற்பனையிலும் தொலை தொடர்பு நிறுவனங்களின் விலை குறைவான இண்டர்நெட் பேக்குகளும் ஆன்லைன் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இதிலும் விளம்பரம் செய்ய முன்வந்துள்ளன
பிராந்தியங்களில் உள்ள தொகுதிக்கு ஏற்ற வகையில் விதவிதமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
கூகுளின் அரசியல் விளம்பரம் வெளிப்படைத் தன்மை அறிக்கையின் படி பல்வேறு டிஜிட்டல் பிரிவுகளில் மொத்த செலவு பிப்ரவரி 19 முதல் ரூ. 86,311,600 கோடியாக இருந்தது என்று தெரிவித்துள்ளது.
பேஸ்புக் இதே போன்ற அறிக்கையை வெளியிட்டது. 61,248 விளம்பரங்கள் மூலமாக ரூ. 121,845,456 ஆக செலவு செய்யப்பட்டுள்ளன. இந்திய பொதுத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் 19 வரை நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்படவுள்ளது.