Read in English
This Article is From May 02, 2019

ஆந்திராவில் 5 வாக்குச் சாவடிகளில் மீண்டும் மறு வாக்குப் பதிவு நடைபெறும்

 ஆந்திரா முழுவதும் 175 சட்டசபை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 11 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றன. 

Advertisement
இந்தியா

ஏப்ரல் 11 - வாக்களிக்கும் நாளன்று வன்முறை சம்பவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு மற்றும் பிற காரணங்களால் இங்கு வாக்குப்பதிவு சரிவர நடைபெறவில்லை

Amaravati:

தேர்தல் ஆணையம் மே 6 ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் 5 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. குண்டூர், பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில்  உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

“வாக்குச் சாவடிகளை முறையாக கவனித்த அதிகாரிகளின் அறிக்கையை கருத்தில் கொண்டு இந்திய சட்டம் பிரிவு எண் 58 துணை பிரிவு 2 இன் கீழ் ஏப்ரல் 11 அன்று தேர்தல் நடந்த இந்த “ தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு மே 6 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

ஏப்ரல் 11 - வாக்களிக்கும் நாளன்று வன்முறை சம்பவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு மற்றும் பிற காரணங்களால் இங்கு வாக்குப்பதிவு சரிவர நடைபெறவில்லையென தகவல்கள் வந்துள்ளன. இந்த தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடக்க வேண்டுமென பரிந்துரைகளும் செய்யப்பட்டன. 

Advertisement

 ஆந்திரா முழுவதும் 175 சட்டசபை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 11 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றன. 

Advertisement