Read in English
This Article is From May 20, 2019

தேர்தல் முடிவுகள், கருத்து கணிப்பு முடிவுகளை தவறாக்கும் -சசி தரூர்

Lok Sabha elections 2019 exit polls: அனைத்து கருத்து கணிப்புகளும் தவறாகும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய தேர்தலிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தவறாக இருந்தது.  பலர் அரசாங்கத்திற்கு பயந்து உண்மையான கருத்துகளை கூறவில்லை

Advertisement
இந்தியா Edited by

Lok Sabha elections 2019: அனைத்து கருத்து கணிப்புகளும் தவறாகும் என்று நம்புகிறே

New Delhi:

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியான பிறகு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். 

“அனைத்து கருத்து கணிப்புகளும் தவறாகும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய தேர்தலிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தவறாக இருந்தது.  பலர் அரசாங்கத்திற்கு பயந்து உண்மையான கருத்துகளை கூறவில்லை என்றும் அதனால் மே 23 வரை முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருப்போம்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்று கருத்துகணிப்புகளை மீறி வெற்றி பெற்றார். அதுபோல் கருத்துக் கணிப்புகளை மீறி ராகுல் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் பாஜக 302 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எதிர்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பலவும் இந்த கருத்துக் கணிப்பை புறக்கணித்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்தக் கருத்துக்கணிப்பை புறக்கணித்துள்ளனர்.

இந்தியாவின் தேர்தல் 7 கட்டமாக ஞாயிறன்று நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் மே 23 அன்று வெளியாகும். 

Advertisement
Advertisement