This Article is From Apr 01, 2019

காங்கிரஸ் தொடர்பான 687 பேஜ்களை நீக்கியது ஃபேஸ்புக்!!

தேர்தலையொட்டி பேஜ்களை நீக்கியதாக ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது. பக்கத்தில் இருக்கும் பதிவுகள், போலியான தகவல்கள் ஆகியவற்றுக்காக பக்கம் நீக்கப்படவில்லை என்றும், அதிகாரப்பூர்வம் இல்லாத காரணத்தால் நீக்கப்பட்டதாகவும் ஃபேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் தொடர்பான 687 பேஜ்களை நீக்கியது ஃபேஸ்புக்!!

ஃபேஸ்புக்கின் நடவடிக்கை குறித்து அதன் சைபர் பாதுகாப்பு பிரிவு தலைவர் நதானியேல் க்ளேஷெர் பதில் அளித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பதிவுகளில் ஆட்சேபனை இல்லை என்று பேஸ்புக் கூறியுள்ளது
  • நீக்கப்பட்ட பேஜ்கள் ஸ்பாம்களை பரப்பியுள்ளன
  • ஆட்டோமேடிக் முறையில் பல பேஜ்கள் நீக்கப்பட்டுள்ளன
New Delhi:

காங்கிரஸ் தொடர்பான 687 பேஜ்களை நீக்கியுள்ளதாக பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் காங்கிரசின் ஐ.டி. பிரிவுடன் தொடர்புடையவை என்றும், அவை போலியாக இருந்ததாக நீக்கப்பட்டதாகவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது. 

மேலும் விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக், நீக்கப்பட்ட பக்களில் இருந்த பதிவுகள் ஆட்சேபனைக்கு உரியது இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட பேஜ்கள் அதிகாரப்பூர்வம் அற்றவையாகவும், ஸ்பாம்களை பரப்பும் வகையில் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேஜ்கள் நீக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து பதில் ஏதும் வரவில்லை. இந்த தகவலை ஃபேஸ்புக்கின் சைபர் செக்யூரிட்டி பிரிவின் தலைவர் நதானியேல் க்ளேஷெர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''போலியான அக்கவுண்டுகளை பயன்படுத்தி சிலர் பேஜ்களை உருவாக்கி தகவல்களை பரப்பியுள்ளனர். அவர்கள் யார் என்கிற விவரத்தை பேஜ்களில் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் பேஜ்களை நீக்கினோம்.

அதிகாரப்பூர்வம் இல்லாத பேஜ்களை நீக்கும் நடவடிக்கை தொடரும். போலியான அக்கவுண்ட்டுகளை பயன்படுத்தி தகவல்களை பரப்பி மற்றவர்களுக்கு இடையூறு அளிப்பதை நாங்கள் விரும்பவில்லை.'' என்றார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்கள் செயல்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்திருந்தது. இந்த நிலையில் ஃபேஸ்புக் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

.