நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
New Delhi: மக்களவை தேர்தல் 2019 தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் அறிந்து கொள்ளலாம்.
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் ஏப்ரல் 11-ம்தேதி தேர்தல் தொடங்குகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.
நடைபெறவிருப்பது என்பது 17-வது மக்களவை தேர்தலாகும். இதில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி பிரதமர் ஒருவரை தேர்வு செய்வார்கள். இதே காலத்தில் ஆந்திரா, சிக்கிம், அருணாசல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.
ஆந்திராவின் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 11-ம்தேதியும், சிக்கிம், அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல் அதே நாளிலும் நடைபெறுகின்றன. ஒடிசாவை பொறுத்தளவில் ஏப்ரல் 11,18,23 மற்றும் 29 ஆகி நாட்களில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 90 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். கடந்த முறையை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 9 கோடி பேர் அதிகரித்துள்ளனர். அவர்களில் 13 கோடி வாக்காளர்கள் முதன்முறை வாக்காளர்களாக உள்ளனர்.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். மொத்தம் 27.3 கோடி பேர் வாக்களிக்கவில்லை. வாக்காளர்களில் 3-ல் இரண்டுபேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 43 கோடி பேர் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர்.
டேட்டா உபயோகிக்கும் 50 கோடி பேரில் 30 பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். 20 கோடி பேர் வாட்ஸ் ஆப்பின் வழியே மெசேஜ் அனுப்புகின்றனர். 3 கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அவர்களில் குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் புதிய தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்களை தீவிரமாக பயன்படுத்துகின்றனர். இளம் வாக்காளர்களை கவர்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2014-ல் பாஜக 543 தொகுதிகளில் 282 இடங்களை கைப்பற்றியது. அதற்கு முன்பாக 10 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த முறை பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரசின் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட உள்ளார்.
நடப்பாண்டில் சுமார் 2 ஆயிரம் கட்சிகள், 8 ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்களுக்கு சென்று தேர்தல் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக படகு, விமானங்கள், ரயில்கள், ஹெலிகாப்டர்கள், யானைகள், ஒட்டகங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் தேதிகள்
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, 12 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
Election dates 2019: The 2019 raodmap for elections 2019.
வாக்குச் சாவடிகள்
10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் இந்த மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்படுகின்றன. இது ஓர் உலக சாதனையாகும். இந்த தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபாட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 11 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது.
தகுதியான வாக்காளர்கள்
மொத்தம் 90 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். கடந்த முறையை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 9 கோடி பேர் அதிகரித்திருக்கிறார்கள். 13 கோடி பேர் முதன்முறையாக தங்கள் வாக்கை செலுத்த உள்ளனர். கடந்த 2014 தேர்தலின்போது வாக்குப்பதிவு 66.4 சதவீதமாக இருந்தது. இதன்படி 27.3 கோடி பேர் வாக்களிக்கவில்லை. முதன் முதலில் நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது வாக்களிக்க தகுதியானவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்ந்திருக்கிறது.
முதன்முறை வாக்காளர்கள்
2019 மக்களவை தேர்தலில் மொத்தம் 13 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். வாக்களர்களில் மூன்றில் 2 பங்கு பேர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள்.
திருநங்கைகள் பிரிவு
மற்றவர்கள் என்ற பிரிவில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடக்கவிருக்கும் தேர்தலில் மொத்தம் 38,325 திருநங்கைகள் வாக்களிக்க உள்ளனர்.
வேட்பாளர்கள் விவரம்
நாடுமுழுவதும் மொத்தம் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேட்பாளர்களாக உள்ளனர். 543 மக்களவை தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. 2 தொகுதிகள் ரிசர்வ் செய்யப்பட்டவை.
1,841 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. அவை இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.
தேர்தலில் ஆகும் செலவு
டெல்லியை சேர்ந்த மீடியா ஸ்டடீஸ் நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி சுமார் 50 ஆயிரம் கோடி அளவுக்கு இந்த தேர்தலை நடத்துவதற்கு செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டங்கள் வாரியாக தேர்தல் நடத்தப்படும் தொகுதிகள் விவரம்
முதல்கட்டம் - ஏப்ரல் 11
1. ஆந்திராவில் 25 தொகுதிகள்
2. அருணாசலில் 2 தொகுதிகள்
3. அசாம் - 5 தொகுதிகள்
4. பிகார் - 4 தொகுதிகள்
5. சத்தீஸ்கர் - 1 தொகுதி
6. ஜம்மு காஷ்மீர் - 2 தொகுதிகள்
7. மகாராஷ்டிரா 7 தொகுதிகள்
8. மணிப்பூர் - 1 தொகுதி
9. மேகாலயா - 2 தொகுதிகள்
10. மிசோரம் - 1 தொகுதி
11. நாகலாந்து - 1 தொகுதி
12. ஒடிசா - 4 தொகுதிகள்
13. சிக்கிம் - 1 தொகுதி
14. தெலங்கானா - 17 தொகுதிகள்
15. திரிபுரா - 1 தொகுதி
16. உத்தர பிரதேசம் - 8 தொகுதிகள்
17. உத்தரகாண்ட் - 5 தொகுதிகள்
18. மேற்கு வங்கம் - 2 தொகுதிகள்
19. அந்தமான் - நிகோபர் தீவுகள் - 1 தொகுதி
20. லட்சத்தீவு - 1 தொகுதி
2-வது கட்டம் - ஏப்ரல் 18
1. அசாம் - 5 தொகுதிகள்
2. பிகார் - 5 தொகுதிகள்
3. சத்தீஸ்கர் - 3 தொகுதிகள்
4. ஜம்மு காஷ்மீர் - 2 தொகுதிகள்
5. கர்நாடகா - 14 தொகுதிகள்
6. மகாராஷ்டிரா - 10 தொகுதிகள்
7. மணிப்பூர் - 1 தொகுதி
8. ஒடிசா - 5 தொகுதிகள்
9. தமிழ்நாடு - 39 தொகுதிகள்
10. திரிபுரா - 1 தொகுதி
11. உத்தர பிரதேசம் - 8 தொகுதிகள்
12. மேற்கு வங்கம் - 3 தொகுதிகள்
13. புதுச்சேரி - 1 தொகுதி
கட்டம் 3 - ஏப்ரல் 23
1. அசாம் - 4 தொகுதிகள்
2. பீகார் - 5 தொகுதிகள்
3. சத்தீஸ்கர் - 7 தொகுதிகள்
4. குஜராத் - 26 தொகுதிகள்
5. கோவா - 2 தொகுதிகள்
6. ஜம்மு காஷ்மீர் - 1 தொகுதி
7. கர்நாடகா - 14 தொகுதிகள்
8. கேரளா - 20 தொகுதிகள்
9. மகாராஷ்டிரா - 14 தொகுதிகள்
10. ஒடிசா - 6 தொகுதிகள்.
11. உத்தர பிரதேசம் - 10 தொகுதிகள்
12. மேற்கு வங்கம் - 5 தொகுதிகள்
13. தாத்ரா நாகர் ஹவேலி - 1 தொகுதி
14. டாமன் மற்றும் டையூ. - 1 தொகுதி.
கட்டம் 4 - ஏப்ரல் 29
1. பீகார் - 5 தொகுதிகள்
2. ஜம்மு காஷ்மீர் - 1 தொகுதி
3. ஜார்க்கண்ட் - 3 தொகுதிகள்
4. மத்திய பிரதேசம் - 6 தொகுதிகள்.
5. மகாராஷ்டிரா - 17 தொகுதிகள்
6. ஒடிசா - 6 தொகுதிகள்
7. ராஜஸ்தான் - 13 தொகுதிகள்.
8. உத்தர பிரதேசம் - 13 தொகுதிகள்.
9. மேற்கு வங்கம் - 8 தொகுதிகள்.
கட்டம் 5 - மே 6
1. பீகார் - 5 தொகுதிகள்
2. ஜம்மு காஷ்மீர் - 2 தொகுதிகள்.
3. ஜார்க்கண்ட் - 4 தொகுதிகள்
4. மத்திய பிரதேசம் - 7 தொகுதிகள்
5. ராஜஸ்தான் - 12 தொகுதிகள்
6. உத்தர பிரதேசம் - 14 தொகுதிகள்
7. மேற்கு வங்கம் - 7 தொகுதிகள்.
கட்டம் 6 - மே 12
1. பீகார் - 8 தொகுதிகள்
2. அரியானா - 10 தொகுதிகள்
3. ஜார்க்கண்ட் - 4 தொகுதிகள்.
4. மத்திய பிரதேசம் - 8 தொகுதிகள்
5. உத்தர பிரதேசம் - 14 தொகுதிகள்
6. மேற்கு வங்கம் - 8 தொகுதிகள்.
7. டெல்லி - 7 தொகுதிகள்.
கட்டம் 7 - மே 19
1. பீகார் - 8 தொகுதிகள்.
2. ஜார்க்கண்ட் - 3 தொகுதிகள்.
3. மத்திய பிரதேசம் - 8 தொகுதிகள்.
4. பஞ்சாப் - 13 தொகுதிகள்.
5. மேற்கு வங்கம் - 9 தொகுதிகள்
6. சண்டிகர் - ஒரு தொகுதி
7. உத்தர பிரதேசம் - 13 தொகுதிகள்
8. இமாசல பிரதேசம் - 4 தொகுதிகள்
தொகுதி வாரியாக தேர்தல் தேதிகளை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும் here.
மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பவை வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், அரசு உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்டவை. அவற்றில், அரசு அறிவிப்புகள், இலவச அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதும் அடங்கும். இந்த அறிவிப்புகள் வாக்காளர்களின் மன நிலையை மாற்றும் என்பதால் இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயரை சரிபார்க்க பின்வரும் முறைகளை செய்யலாம்...
1. தேசிய வாக்காளர்கள் சேவையின் இணைய தளத்திற்கு சென்று பெயரை சரிபார்க்கலாம். electoralsearch.in
2. மிகவும் எளிதாக உங்களது பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், மாநிலம், மாவட்டம், சட்டசபை உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையிலும் நமது பெயரை வாக்காளர்கள் பட்டியலில் தேடலாம்.
3. இன்னும் மாற்றமாக எபிக் நம்பர் எனப்படும் வாக்காளர் எண்ணைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் விவரத்தை அறியலாம்.
புதிய வாக்காளர் என்றால் ஆன்லைனில் பதிவு செய்ய...
1. www.nvsp.in என்ற இணையதள முகவரிக்கு சென்று வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.
2. படிவம் 6 என்பது முதன்முறை வாக்காளர்களுக்கு உரியது. மற்ற சட்டமன்ற தொகுதிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் இந்த படிவம் பொருந்தும்.
3. இந்த படிவத்தில் ஐ.டி., முகவரி சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து பெயரை பதிவு செய்யலாம்.
ஆஃப்லைனில் பதிவு செய்வதற்கு...
ஆன்லைனை தவிர்த்து ஆஃப்லைனிலும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். படிவம் எண். 6- இரு படிவங்களாக நிரப்ப வேண்டும். இது தேர்தல் பதிவு அலுவலகங்கள், பூத் அளவிலான அலுவலங்களில் இலவசமாக கிடைக்கின்றன.
இதனை நிரப்பி தேர்தல் பதிவு அலுவலர், உதவி தேர்தல் பதிவு அலுவலர் ஆகியோரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
---
இரு பிரமாண்ட தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. பாஜக இதனை சங்கல்ப பத்திரம் என்றும், காங்கிரஸ் கட்சி இந்தியர்களின் குரல் என்றும் அழைக்கின்றன.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது, தீவிரவாதத்தை ஒடுக்குவது, வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது போன்றவையும் உள்ளன.
காங்கிரஸை பொறுத்தளவில் வறுமை ஒழிப்பு திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது. இதற்காக நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் தொகை வழங்கப்படும். இதனை தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில மேற்கொள்ளப்பட்டதை போன்று கடன் தள்ளுபடிகள் செய்ப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.எஸ்.டி.க்கு மாற்றமாக வரி விதிப்பு முறை கொண்டு வரப்படும்.