This Article is From Mar 27, 2019

குமரி காங்., வேட்பாளர் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மக்களவை தேர்தல் 2019: கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரின், அசையும் சொத்து ரூ.230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302, அசையா சொத்து ரூ.182 கோடியே 25 லட்சமும் ஆக மொத்தம் ரூ.412 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 302 ஆகும்.

குமரி காங்., வேட்பாளர் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் ஆவார்

Chennai:


மக்களவைத் தேர்தலுக்கான கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் ஆவார். இவர் சொந்தமாக தொழில் செய்து வருபவர். இவர் வேட்பு மனு தாக்கலின் போது, இவரது மொத்த சொத்து ரூ.412 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 302 ஆக தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடத்தில் மட்டும் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இவரின் அசையும் சொத்து ரூ.230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302 என்றும், அசையா சொத்து ரூ.182 கோடியே 25 லட்சமும் ஆக மொத்தம் ரூ.412 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 302 ஆகும் என தெரிவித்துள்ளார்.

வசந்தகுமாரின் கடன் மதிப்பு மட்டும், ரூ. 154 கோடியே 75 லட்சத்து 11 ஆயிரத்து 439 கோடி என்றும் இதில் அரசுக்கு எந்தவிதமான தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013- 14ஆம் ஆண்டில் அவரது வருமானம் ரூ.19கோடியே 87 லட்சமாக இருந்த நிலையில், 2017-18ல் 28 கோடியே 93 லட்சமாக 45.59 சதவீதம் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரும், எம்.எல்.ஏவுமான, வசந்தகுமாரும் அவரது மனைவியும், வசந்த் & கோ மீடியா பிரைவேட் லிமி., பங்குதாரராக இருந்து வருகின்றனர். இதைபோல், அவர் வசந்த் என்ற சாட்டிலைட் தொலைக்காட்சியும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

.