This Article is From Apr 17, 2019

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் - தடுத்த அ.ம.மு.க.வினரை விரட்ட துப்பாக்கி சூடு

“பணப் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 300 ஆக பிரிக்கப்பட்டு வாக்காளர்கள் பெயர்கள் கவரில் எழுதப்பட்டுள்ளன. சோதனை தொடர்கிறது.” என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்  - தடுத்த அ.ம.மு.க.வினரை விரட்ட துப்பாக்கி சூடு

சம்பவம் தொடர்பாக நான்கு அமமுக தொண்டர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தேனியில் உள்ள கடைகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது
  • அமமுக ஆதரவாளர்கள் தடுத்ததால் துப்பாக்கிச் சூடு
  • 4 அமமுக ஆதரவாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Theni, Tamil Nadu:

தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தேனி மக்களவை தொகுதியில் உள்ள கடையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி மக்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணத்தினை பறிமுதல் செய்தனர். டிடிவியின் ஆதரவாளர்கள் சோதனை செய்யத் தடுத்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

வாக்காளர்கிடையே விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை பறிமுதல் செய்யப்படுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனை செய்ய அதிகாரிகள் கடையை முற்றுகையையிட்ட போது அமமுக ஆதரவாளர்கள் ஓடிவிட்டனர். கடை உரிமையாளரும் ஷட்டரை மூடிவிட்டு ஓடினார். டிடிவி ஆதரவாளர்கள் சோதனை செய்ய வந்த அதிகாரி அனுமதிக்காதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி 4 முறை சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயம்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பாக நான்கு அமமுக தொண்டர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பணப் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 300 ஆக பிரிக்கப்பட்டு வாக்காளர்கள் பெயர்கள் கவரில் எழுதப்பட்டுள்ளன. சோதனை தொடர்கிறது. என்று மூத்த அதிகாரி தெரிவித்தார். 

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

.