பாஜகவின் முடிவை ஏற்பதாக தேஜஸ்வினி அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- பெங்களூரு தெற்கு தொகுதி வேட்பாளராக தேஜஸ்வினி பரிந்துரைக்கப்பட்டார்.
- தேஜஸ்விக்கு பதிலாக 28 வயது தேஜஸ்வி சூர்யா நிறுத்தப்பட்டுள்ளார்
- தேஜஸ்வினி மறைந்த பாஜக அமைச்சர் அனந்த்குமாரின் மனைவி
Bengaluru: பாஜகவில் சீட்டு கிடைக்காததால் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மனைவி தேஜஸ்வினி அதிருப்தி தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜக கட்சியில் தூணாக இருந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார்.
பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக அனந்த் குமார் இருந்தார். 5 முறை பெங்களூரு தெற்கு தொகுதியின் உறுப்பினராக இருந்த அனந்த் குமார் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவரது தொகுதியில் மனைவி தேஜஸ்வினிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 28 வயதான வழக்கறிஞர் தேஜஸ்வி யாதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேஜஸ்வினி கூறுகையில், ''தேஜஸ்வியை வேட்பாளராக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் எனது பக்குவத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. எனது கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.
எனது கணவர் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்தார். நாடு அவருக்கு முதலாவதாகவும், கட்சி அவருக்கு இரண்டாவதாகவும் இருந்தது. அவர் சுயநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இப்போது கட்சிக்காக உழைக்க வேண்டியுள்ளது.'' என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்துள்ளன. இங்கு முன்பை விட பாஜகவுக்கு போட்டி கடுமையாக உள்ளது.
தற்போது அனந்த குமார் போட்டியிட்ட தொகுதியில் பாஜகவின் இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யா நிறுத்தப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர் தேஜஸ்வி என்பது குறிப்பிடத்தக்கது.