This Article is From Mar 22, 2019

பீகாரில் தொகுதிப் பங்கீடு நிறைவு: 9 இடங்களில் காங்கிரஸ் - லாலு கட்சிக்கு 20 சீட்டுகள்!!

பீகாரில் காங்கிரஸ் கட்சி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகளை தவிர்த்து மேலும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

பீகாரில் தொகுதிப் பங்கீடு நிறைவு: 9 இடங்களில் காங்கிரஸ் - லாலு கட்சிக்கு 20 சீட்டுகள்!!

பீகாரில் வாக்குப்பதிவு எப்ரல் 11-ம்தேதி நடைபெறுகிறது

Patna:

பீகாரில் லாலு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 20 தொகுதிகளில் களம் காண்கிறது. 

பீகாரில் மொத்தம் 40 மக்களவை  தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சரத் யாதவின் ஐக்கிய ஜதா தளம், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, விகாஷீல் இன்சான் உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளன. 

கடந்த சில வாரங்களாக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி காங்கிரஸ் மொத்தம் 9 இடங்களில் போட்டியிடுகிறது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 20 தொகுதிகளில் களம் காண்கிறது. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு 5 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

விகாஷீல் இன்சான் கட்சிக்கு 3 தொகுதிகளிலும், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், உபேந்திர குஷ்வாஹா, சரத் யாதவ், ஜிதன் மாஞ்சி உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பீகாரில் ஏப்ரல் 11-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இங்கு கூட்டணி வைத்துள்ளன. இரு கட்சிகளும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

.