இரண்டு வாரத்துக்கு முன்னர், பிரியங்கா காந்தி தனது அதிகாரபூர்வ அரசியல் என்ட்ரியை கொடுத்தார்.
ஹைலைட்ஸ்
- 500 பேர் பிரியங்கா சேனாவில் இணைந்துள்ளனர்
- இன்று பிரியங்கா லக்னோவில் சாலை வழிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்
- 'பெண்களுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வரவேண்டும்' என்பது சேனாவின் மோட்டோ
New Delhi: காங்கிரஸ் பொதுச் செயலாள் பிரியங்கா காந்தி, இன்று முதல் உத்தர பிரதேசத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார். இந்நிலையில், ‘பிரியங்கா சேனா' என்கின்ற அவரது ரசிகர்கள் பிங்க் சீறுடையில் களப்பணியாற்ற கிளம்பியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 500 பேர், தற்போது பிரியங்கா சேனாவில் இணைந்துள்ளனர். அவர்கள் இந்த சேனா, தற்போது தொடங்கப்பட்டதில்லை என்றும், சீறுடைதான் புதியது என்றும் கூறுகின்றனர்.
அவர்களின் சீறுடையில், ‘நாட்டிற்கு மரியாதை செய்யும் வகையில் பிரியங்கா காந்திக்கு நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம். தேவைப்பட்டால் உயிரையும் கொடுப்போம்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்துக்கு முன்னர், பிரியங்கா காந்தி தனது அதிகாரபூர்வ அரசியல் என்ட்ரியை கொடுத்தார். அவரின் இந்த அரசியல் பிரவேசம் காங்கிரஸுக்கும் அதன் தொண்டர்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸின் ‘சக்தி' மொபைல் செயலி மூலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரியங்கா, ‘ஒரு புதிய அரசியலை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம். நாம் முன்னெடுக்கும் அரசியலில் அனைவரின் பங்கும் இருக்கும். அந்த அரசியலின் மூலம் இளைஞர்களின், பெண்களின், ஏழைகளின் குரல் கேட்கும்' என்று தொண்டர்களிடம் கூறியிருந்தார்.