This Article is From Feb 13, 2019

கொல்கத்தாவை தொடர்ந்து டெல்லியில் கெத்து காட்டும் மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் பேரணி நடத்துகிறார்.

பாஜகவை எதிர்ப்பதில் முன்வரிசையில் நிற்கிறார் மம்தா

New Delhi:

கொல்கத்தாவில் 3 வாரங்களுக்கு முன்பு பாஜகவுக்கு எதிரான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய மம்தா பானர்ஜீ தற்போது டெல்லியிலும் பேரணி நடத்தவுள்ளார். அவருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு எதிரான இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'மஹாகத் பந்தன்' என்று பெயர் சூட்டியுள்ளார்கள். டெல்லியில் மம்தா இன்று நடத்திவரும் பேரணி மற்றும் போராட்டத்திற்கு 'மஹாகத் பந்தன் 2.0' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரில் மம்தாவின் போராட்டம் நடந்து வருகிறது.

நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பது மம்தா நடத்தும் போராட்டத்தின் மையக்கருவாகும். இந்தப் போராட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மம்தா அளித்த பேட்டியில், ''மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்பது பிரதமர் மோடிக்கு தெரிந்து விட்டது. அவர் காலாவதியாகி விட்டார். இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். நாட்டை புதிய அரசு ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். ஒன்றுபட்ட இந்தியா இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

n9r4tsh8

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அப்படி நாடாளுமன்ற அலுவல் முடிந்து விட்டால் எம்பிக்கள் ஜந்தர் மந்தருக்கு வந்து மம்தாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ விசாரணை விவகாரத்தில் மம்தாவுக்கு நெருக்கடிகள் இருக்கின்றன. ஆனால், டெல்லி போராட்டம் என்பது ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்கள் கூடிப்பேசி முடிவு செய்ததுதான் என்று மம்தா கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு திங்களன்று டெல்லியில் போராட்டம் நடத்தினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது. அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் க ந்தி, தேசியவாத மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்டோரில் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர்.

மாநில கட்சிகளை பொறுத்தவரையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், ஆந்திர முதல்வர் சந்திர சேகர ராவும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.