This Article is From May 17, 2019

பாஜக வெற்றிக்கு வாய்ப்பே இல்லை : மாநிலவாரியாக கணக்கு சொல்லும் மம்தா பானர்ஜி

Elections 2019: பாஜக தலைவர் அமித்ஷா 300 இடங்களைப் பெறும் என்று கூறியிருந்த நிலையில், மம்தா மாநிலவாரியான கணக்கை கொடுத்துள்ளார்.

பாஜக வெற்றிக்கு வாய்ப்பே இல்லை : மாநிலவாரியாக கணக்கு சொல்லும் மம்தா பானர்ஜி

Elections: ஆந்திராவில் -ஜீரோ; தமிழ்நாட்டில் -ஜீரோ, மஹாராஷ்டிராவில் -20 மொத்தம் 200 இடங்களை இழந்து விட்டது.

Kolkata:

அமித்ஷாவின் கூட்டத்தில் வன்முறை வெடித்ததால் வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார். வியாழன் அன்று கிடைத்த ரிபோர்ட் படி பா.ஜ.க 100 இடங்களைக் கூட பெறாது என்று மம்தா கணித்துள்ளார். இதனால் குண்டர்களின் கட்சியான பாஜக பணம் கொடுத்து ஒட்டினை வாங்க முயற்சித்து வருகிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

பாஜக தலைவர் அமித்ஷா 300 இடங்களைப் பெறும் என்று கூறியிருந்த நிலையில், மம்தா மாநிலவாரியான கணக்கை கொடுத்துள்ளார். ஆந்திராவில் -ஜீரோ; தமிழ்நாட்டில் -ஜீரோ, மஹாராஷ்டிராவில் -20 மொத்தம்  200 இடங்களை இழந்து விட்டது.

மம்தா பானர்ஜி கடைசி நாள் பிரசாரத்தை தேர்தல் ஆணையம் தடை செய்த நிலையில் தன்னுடைய பிரசார திட்டதை மாற்றியமைத்தார். வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று காலை 10 மணியளவில் முடிவடைந்தது. தேசிய தேர்தலின் கடைசி கட்ட வாக்குப் பதிவுகள் கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. மாநில சட்டமன்றத் தேர்தல் 9 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. 42 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது,

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூற்றம் சாட்டிய முதல்வர். திரிணாமுல் கட்சியை சேர்ந்த குண்டர்கள் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை உடைத்தால் அந்த ஊர்வலத்தில் வன்முறை தூண்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அமைக்க பணம் உள்ளது. சிலையின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை கொடுக்க முடியுமா..? என்று கேள்வியெழுப்பியுள்ளார். எங்களால் பாஜகதான் இந்த செயலை செய்தது என்பதை நிரூபிக்க முடியும். நீங்கள் திரிணாமுல் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். வெட்கமாக இல்லை. பிரதமர் அதிகம் பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

செவ்வாய்கிழமை நடந்த வன்முறையில் 19 நூற்றாண்டின் சீர்திருத்தவாதியான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ராவ் சிலை உடைக்கப்பட்டது. பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸும்  ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகின்றனர். 

.