This Article is From Mar 16, 2019

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டி: வைகோ அறிவிப்பு

கணேசமூர்த்தி 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 12ஆவது (1998) மக்களவே தேர்தலில் பழனி தொகுதியிலும், 2009 -14 ஆண்டுகளில் ஈரோடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டி: வைகோ அறிவிப்பு

மதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார்.

Chennai:

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி, மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், மதிமுகவுக்கு 1 (மக்களவை தொகுதியும்), ஒரு மாநிலளங்களையும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், ஈரோடு தொகுதியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணேசமூர்த்தி 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 12ஆவது (1998) மக்களவே தேர்தலில் பழனி தொகுதியிலும், 2009 -14 ஆண்டுகளில் ஈரோடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

மேலும், வரும் 19ஆம் தேதி கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.