This Article is From May 21, 2019

கருத்துக் கணிப்பால் உற்சாகம்! 2 ஆயிரம் கிலோ லட்டுவை ஆர்டர் செய்த பாஜக வேட்பாளர்!!

தேர்தலுக்கு பின்பு வந்த கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 302 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பால் உற்சாகம்! 2 ஆயிரம் கிலோ லட்டுவை ஆர்டர் செய்த பாஜக வேட்பாளர்!!

நாளை மறுதினம் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

Mumbai:

கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் கொண்டாட்ட மனநிலைக்கு பாஜகவினர் சென்றுள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வடக்கு மும்பை தொகுதியில் பாஜக சார்பாக கோபால் ஷெட்டி போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல நடிகையுமான ஊர்மிளா மடோன்ட்கரை எதிர்த்து களத்தில் நிற்கிறார். இந்த நிலையில் அவர் பாஜக வெற்றியை கொண்டாடுவதற்காக 2 ஆயிரம் கிலோ லட்டுவை ஆர்டர் செய்திருக்கிறார்.

இந்த லட்டுகள் நாளை மறுதினம் தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே 80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக, அதிக மக்களவை தொகுதிகளை கொண்டது மகாராஷ்டிரா. இங்கு மும்பையில் மட்டும் 6 மக்களவை தொகுதிகள் உள்ளன.

.