Read in English
This Article is From Mar 08, 2019

மிசோரம் கவர்னர் ராஜினாமா - கேரளாவில் சசிதரூரை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு

கும்மனம் ராஜசேகரன் கேரள மாநில பாஜகவின் தலைவராக கடந்த 2015-ல் இருந்தார். அவர் கடந்த ஆண்டு மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

Advertisement
இந்தியா Edited by

மக்களவை தேர்தல் வரும் நிலையில் மிசோரம் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

New Delhi:

மிசோரம் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார். கேரளாவில் அவர் சசி தரூரை எதிர்த்து போட்டியிலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து ராஜசேகரன் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கட்சியின் உத்தரவுப்படி நான் எனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் கேரளாவில் இருப்பதற்கு நான் விரும்புகிறேன். அதன் காரணமாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

கேரள மாநில பாஜக தலைவராக கும்மனம் ராஜசேகரன் கடந்த 2015-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தார். அவரை கடந்த ஆண்டு மே மாதத்தின்போது, மிசோரம் கவர்னராக குடியரசு தலைவர் நியமனம் செய்தார். 

இந்த நிலையில் கும்மனம் ராஜசேகரனின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை எதிர்த்து திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement