ரஃபேல் ஆவணங்கள் தொலைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஸ்டாலின்
Chennai: ரஃபேல் ஆவணங்களை தொலைத்தவர்கள் நாட்டை எப்படி பாதுகாப்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.
ரஃபேல் விவகாரத்தில் பெரும் அளவு முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 14-ல் அளிக்கப்பட்ட உத்தரவில் முறைகேடு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டு வெளியிடப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரஃபேல் ஆவணங்களை தொலைத்தவர்கள் நாட்டை எப்படி பாதுகாப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
தேமுதிக மற்றும் திமுக இடையே துரைமுருகன் அளித்த பேட்டியைத் தொடர்ந்து மோதல் அதிகரித்திருக்கிறது. அதுபற்றி கருத்துக் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.