கர்நாடக முதல்வர் குமாரசாமி 'ரிமோட் கன்ட்ரோல் முதல்வர்' என்று மோடி கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- PM at a rally in Karnataka said HD Kumaraswamy is a remote-controlled CM
- He termed the "mahagathbandhan" a "mahamilavat " (mega adulteration)
- He said the country wants a strong government and not a "helpless" one
Bengaluru: தீவிரவாதம் மற்றும் வறுமையை ஒழிக்க தான் முயற்சி எடுத்து வருவதாகவும், தன்னை எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்து அகற்ற முயல்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது-
125 கோடி மக்களின் ஆதரவு இருந்தால் யாரும் எதற்காகவும் மண்டியிட மாட்டார்கள். இந்தியாவும், இங்கிருக்கும் 125 கோடி மக்களும் எனக்கு முழு வலிமையை தந்துள்ளனர்.
பிப்ரவரி 26-ம்தேதி பாலக்கோட்டில் நமது விமானப்படைகள் தாக்குதல் நடத்திய எதிரிகளை சிதறடித்தன. நாம் புதுவிதமான யுக்திகளை கையாண்டு வருகிறோம். இதனை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இது மோடியின் நடவடிக்கை என்று சொல்ல முடியாது. 125 கோடி இந்திய மக்களின் நடவடிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த நாட்டுக்கு வலிமையான அரசுதான் தேவை. உதவி இல்லாத, ரிமோட் கன்ட்ரோல் முதல்வராக இருக்கும் இந்த மாநிலத்தை போன்ற ஆட்சி நாட்டுக்கு தேவையில்லை.
கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒரு ரிமோட் கன்ட்ரோல் முதல்வர். கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்து விட்டு காங்கிரசும் - மதசார்பற்ற ஜனதா தளமும் ஆட்சிக்கு வந்துள்ளன.
விவசாயிகளின் கடன்களை நீக்குவதாக இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்தன. ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடையம் எனது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.