Lok Sabha Elections 2019: பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
New Delhi: பிரதமராக வேண்டும் என நினைத்தது கூட கிடையாது என பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில், பாஜக பெரும்பான்மையை பெறாத பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், அப்படி ஒரு நிலையில் பிரதமராக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என பரவலாக கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், நரேந்திர மோடியே எங்கள் தலைவர் என்றும் அவரே எங்கள் பிரதமர் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், நாங்கள் எங்கள் கூட்டணியுடன் சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்போமே தவிர பாஜக அரசை அமைக்கமாட்டோம்.
மேலும், அவரிடம் பாஜக எப்படி பெரும்பான்மையை பெறும் என்று கேள்வி எழுப்பியபோது, எங்களது கட்சி ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். உத்தர பிரதேசத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவிலான வெற்றியை பெறுவோம்.
பெரும்பாலான கருத்துகணிப்புகளில், 2014 தேர்தலில் பாஜக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி கூட்டணி அமைத்ததாலே 80ல் 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்கட்சிகளின் வாக்குகள் பிரியும் என கூறப்படுகிறது.
இரண்டும் இரண்டும் நான்கு என்பது அரசியலில் ஒரு போதும் கிடையாது. இரண்டும் இரண்டும் மூன்றாக கூட இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில், ராகுலை கடுமையாக விமர்சித்த அவர், உங்கள் தந்தை ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார். 1980களில் காங்கிரஸ், ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது குறித்து அவர் மேடையில் பகிரங்கமாக தாக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.