This Article is From Apr 06, 2019

‘ஃபேன்சி டிராக்டரில்’ ஹேமா மாலினியின் தேர்தல் பிரசாரம்- ட்ரோல் செய்யும் காங்கிரஸ் உமர் அப்துல்லா

டிராக்டரை ஹேமாமாலினி ஓட்ட வெயிலுக்கு இதமாக டிராக்டரின் இருபுறமும் ஏர்கூலரை பொருத்தி இருந்தனர்.

பிங்க் நிற உடையில் கூலிங்க் கிளாசை போட்டுக் கொண்டு டிராக்டர் ஓட்டிய ஹேமா மாலினி

ஹைலைட்ஸ்

  • மதுரா தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது டிராக்டர் ஓட்டினார்
  • காங்கிரஸ் தலைவர் உமர் அப்துல்லா இதை கேலி செய்து பதிவிட்டுள்ளார்
  • ஓட்டுக்கான நடிப்பு என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Mathura:

நடிகை ஹேமா மாலினி பாஜகவின்  நாடாளுமன்ற வேட்பாளராக மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக விதவிதமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். 

மெர்செடிஸ் பென்ஸில் நின்றபடி வாக்கு சேகரித்தவர், 

மக்களைக் கவர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டிராக்டர் ஓட்டி மக்களிடம் வாக்கு சேகரித்தார். டிராக்டரை ஹேமாமாலினி ஓட்ட வெயிலுக்கு இதமாக டிராக்டரின் இருபுறமும் ஏர்கூலரை பொருத்தி இருந்தனர். 

இந்த புகைப்படத்தை வைத்து காங்கிரஸ் கட்சியில் தலைவர்களில் ஒருவரான ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதலைமைச்சர் உமர் அப்துல்லா “டிராக்டரின் இருபக்கமும் இருக்கும் ட்ரம்ஸ் என்ன? குளிர்ச்சியான காற்றைத் தரும் ஏர்கூலர் தான் என்று சொல்லாதீர்கள்? ஆஹா என்ன ஒரு ஃபேன்ஸி டிராக்டர்” என்று கேலி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஹேமாமாலினி இரண்டாவது முறையாக மதுரா தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். வாக்காளர்கள் பலர் தொகுதிக்கு சிறிய அளவிலான வேலைகளை மட்டுமே செய்துள்ளார் என்று புகார்கள் எழுந்துள்ளன.

பிரச்சாரத்தின் போது ஹேமா மாலினி மெர்சிடஸ் காரில் நின்றபடி ஓட்டுக் கேட்பதையும் வயல் வெளிகளில் புல் வெட்டும் காட்சிகளையும் ‘ஓட்டுக்கான நடிப்பு' எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து ஹேமாமாலினியிடம் பேசிய போது, “ நான் ஒரு நடிகை, பிரபலமானவர். மும்பையில் இது போன்ற காட்சிகளை ஒரு போதும் பார்க்க முடியாது. கிராமத்தின் சூழல் எனக்கு பிடித்திருக்கிறது. நான் நடிப்பதாகவே இருந்தாலும், மகிழ்ச்சியாக உள்ளது. பார்க்கிறவர்களும் மகிழ்ச்சியாக இதைப் பார்க்கின்றனர்” என்று தெரிவித்தார்.

.