கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்ட பின்னர் பிரியங்கா மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன
New Delhi: காங்கிரசின் உத்தரப்பிரதே மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சி நிர்வாகியாக அதிரடியை காட்டத் தொடங்கியுள்ளார். குற்றச்சாட்டுக்கு ஆளான சர்ச்சைக்குரிய காங்கிரஸ் செயலாளர் குமார் ஆசிஷ் என்பவரை பிரியங்கா நீக்கியுள்ளார். அவரது நடவடிக்கை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக அண்ணனின் அமேதி மற்றும் தாயாரின் ரேபரேலி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வது மட்டுமே பிரியங்காவின் கட்சிப் பணியாக இருந்து வந்தது.
உத்தரப்பிரதேசத்தில் பலம் மிக்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரசை புறக்கணித்த நிலையில், அங்கு பிரியங்காவுக்கு பொதுச்செயலாளர் பொறுப்பை ராகுல் காந்தி வழங்கியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவற்றில் 40 தொகுதிகள் பிரியங்காவின் கீழ் வருகிறது. உத்தரப்பிதேசத்தில் மேற்கு பகுதிக்கு ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் ஜோதிராதித்ய சிந்தியா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியங்கா மற்றும் சிந்தியாவுக்கு உதவியாக தலா 3 வீதம் மொத்தம் 6 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பிரியங்காவுக்கு உதவியாக இருக்கும் ஆசிஷ் குமார் மீது புகார் எழுந்துள்ளது.
அவர் கடந்த 2005-ல் பீகாரில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தண்டனை பெற்றவர். அவர் தொடர்பான செய்திகள் தற்போது வலைதளங்களில் ரவுண்டடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் பிரியங்காவின் பரிந்துரை பேரில் ஆசிஷ் குமாரை ராகுல் காந்தி நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சச்சின் நாயக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்காவின் நடவடிக்கை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து அதிரடியை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - ''கணவர் வதேரா மீதான விசாரணை ஒருபோதும் ஓயாது'' - பிரியங்கா காந்தி ஆதங்கம்