Read in English
This Article is From May 14, 2019

''எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங் நெருக்கடி!!

2014 மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று மகத்தான வெற்றியை பாஜக பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் ராஜ்நாத் சிங்.

New Delhi :

எதிர்க்கட்சிகள் தங்களது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று இந்த தேர்தலிலும் பாஜக மகத்தான வெற்றியைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது-

2014 மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடி மீது மக்கள் மகத்தான நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று அதைவிட அதிகமாகவும் நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். 

கடந்த முறை பிரதமர் மோடி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் இடையே ஏற்பட்ட மோதலாக இருந்தது. இந்த முறை மோடி மட்டும்தான் பிரதமருக்கான களத்தில் இருக்கிறார். அவரை எதிர்த்து யார் நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் தங்களது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். 

Advertisement
Advertisement