Read in English
This Article is From Mar 06, 2019

தமிழகத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி

5 நெடுஞ்சாலை திட்டங்களை மோடி தொடங்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 5,000 கோடி. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement
இந்தியா Edited by

காஞ்சிபுரத்தில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மோடி தொடங்கி வைத்துள்ளார்.

Chennai :

தமிழகத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

5 நெடுஞ்சாலை திட்டங்களை மோடி தொடங்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 5,000 கோடி. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

ஈரோடு - கரூர் - திருச்சி மற்றும் சேலம்  - கரூர் - திண்டுக்கல் ரயில் பாதைகளை மின் பாதையாக்கும் திட்டங்களையும் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் ரயில்கள் செல்லும் பயண நேரம் குறையும். 

Advertisement

ஈரோடு - கரூர் - திருச்சி இடையே 300 கிலோ மீட்டர்  ரயில்வே பாதை மின்மயமாக்கப்படுகிறது. இதேபோன்று சேலம் - கரூர் - திண்டுக்கல் ரயில்வே பாதையும் மின் மயமாக்கப்படவுள்ளது. இதன் மொத்த நீளம் 300 கிலோ மீட்டர். ரூ. 321 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மொத்தம் 26 முதல் 30 மாதங்களுக்குள்ளாக இந்த திட்டம் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தையும் மோடி திறந்து வைத்துள்ளா. கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையும் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement