மம்தா என்னை அருவருப்பாக படம் வரைந்தால், நான் புகார் அளிக்க மாட்டேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Kolkata: மேற்குவங்க முதல்வர் என்னை அருவருப்பாக படம் வரைந்து தர வேண்டும், அதனை நான் மனதார ஏற்றக்கொண்டு வாழ்நாள் முழுவதும் பத்திரமாக வைத்துக்கொள்வேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை கேலி செய்யும் விதமாக அவரது புகைப்படத்தை, அமெரிக்காவில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்துடன் மார்பிங் செய்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவும் பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை போலீசார் கடந்த வெள்ளியன்று கைது செய்து காவலில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவுக்கு உச்சீநிதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, மம்தாவின் செயலுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியதாவது, நீங்கள் ஒரு ஒவியர் என்றும், உங்களது ஒவியங்கள் நாரதா மற்றும் சாரதா ஊழல் என்ற பெயரில் பல கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கேள்விப்பட்டேன்.
என்ன ஆனது உங்களுக்கு? ஏன் ஒரு இளம் மகளை சிறைக்கு அனுப்புனீர்கள்? என்னை அருவருப்பாக ஒரு படம் வரைந்து தர தாருங்கள், அதனை நான் மனதார ஏற்றக்கொண்டு வாழ்நாள் முழுவதும் பத்திரமாக வைத்துக்கொள்வேன். அதற்காக உங்கள் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் என்று அவர் கூறினார்.