Read in English
This Article is From Jan 23, 2019

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்!

Lok Sabha elections 2019 : 2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

Advertisement
இந்தியா ,

Highlights

  • பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக பதவி வழங்கப்படுகிறது.
  • உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக அவர் நியமனம்.
  • ஜோதிராதித்யா சிந்தியா மேற்கு பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
New Delhi:

2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான ப்ரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக பதவி வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகும் வகையில் பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் தனது தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தியின் தொகுதியில் மட்டுமே பிரியங்கா பரப்புரை செய்தார். பிரியங்கா காந்தி வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் பதவி ஏற்றுக்கொள்வார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜோதிராதித்யா சிந்தியாவும் மேற்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதி எம்பியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement