This Article is From Apr 10, 2019

குடும்பத்துடன் பேரணியாக சென்று அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல்!!

தாயார் சோனியா, தங்கை பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் மகள் மிராயா, மகன் ரைஹான் ஆகியோருடன் சென்று ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பாக ராகுல் காந்தி பேரணியாக சென்றார்.

Amethi, Uttar Pradesh:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது சொந்த தொகுதியான அமேதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு தனது குடும்பத்தினருடன் பேரணியாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ராகுலின் தாயார் சோனியா, தங்கை பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் மகள் மிராயா, மகன் ரைஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். 

திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி தனது குடும்பத்தினருடன் இருந்தவாறு சுற்றிலும் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். இந்த காட்சியை ஏராளமானோர் தங்களது செல்போன்களில் படம் எடுத்துக் கொண்டனர். 

பேரணியின்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்குறுதியான ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடர்பான டி ஷர்ட்டை ராகுல் வெளியிட்டார்.
 

gepmovog


உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கு சோனியா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் 40 மக்களவை தொகுதிகள் வருகின்றன. உத்தரபிரதேசத்தில் வாக்காளர்களின் கவனத்தை பெறும் வகையில் பிரியங்கா காந்தி வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் வாக்குகள் சிதறும் என்பதால் இந்த தேர்தல் ராகுலுக்கு கடும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ராகுலின் பேரணியில் அவரது மைத்துனர் ராபர்ட் வதேராவும் கலந்து கொண்டார். அவர் மீது பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதனால், ராகுலின் பேரணியை பாஜக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. 

.