This Article is From Apr 12, 2019

'இளைஞர்கள் தொழில் தொடங்க அரசின் அனுமதி தேவையில்லை' - அதிரடி திட்டத்தை அறிவித்த ராகுல்

மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

'இளைஞர்கள் தொழில் தொடங்க அரசின் அனுமதி தேவையில்லை' - அதிரடி திட்டத்தை அறிவித்த ராகுல்

தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டார்.

Salem, Tamil Nadu:

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்கிறார். ஆனால் எங்கு பார்த்தாலும் சீனா பொருள்கள்தான் உள்ளன என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். தொழில் தொடங்க விரும்புவோர் 3 ஆண்டுகளுக்கு அரசின் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது-
மேக் இன் இந்தியா என்ற வெறும் கோஷத்தை மட்டும் பிரதமர் மோடி எழுப்பிக் கொண்டிருந்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை காண முடிகிறது. 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பொருட்களை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். தொழில் தொடங்க விரும்புவோர் இன்றைக்கு பல அரசு அலுவலகங்களின் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில் செய்ய விரும்புவோர் முதல் 3 ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசு அலுவலகத்தின் அனுமதி பெறாமலேயே தொழில் செய்யயலாம். இதனை எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.  

.