ஊழலுக்கு பிரதமர் உதவுகிறார் என்பதை காங்கிரஸ் அனைத்து தரப்பிலும் சென்று சேர்த்து விட்டதாக ராகுல் கூறியுள்ளார்.
Jaipur: தேர்தல் நேரத்தில் முதன்முறையாக தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். அவரிடம் தேர்தல் நேரத்தில் முதலில் பேட்டி எடுக்கும் டிவியாக NDTV உள்ளது. ராகுல் அளித்த சிறப்பு பேட்டியில், அவரை சுற்றி எழுந்திருக்கும் பல்வேறு சர்ச்சைகளுக்கு விடை அளித்திருக்கிறார். பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி அளித்த 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...
1. தேர்தலில் காங்கிரஸ் வெல்வது உறுதி. நாங்கள் முன்பை விட இந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றி உள்ளோம் என்பதை அறிகிறோம். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பாஜக இந்த முறை வெற்றி பெறாது.
2. மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் காணப்படுகிறது.
3. உத்தர பிரதேசத்தில் மத நல்லிணக்கம் பேணும் கட்சிகள் வெற்றி பெறும். காங்கிரஸ் அங்கு ஓட்டை பிரிக்காது. காங்கிரஸ் வெற்றி பெறாத இடங்களில், பாஜக வாக்கை பிரிக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். எங்களது வியூகம், மாயாவதி, அகிலேஷ் யாதவுக்கு பலன் அளிக்கும்.
4. அகிலேஷ் யாதவ், மாயாவதி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இருப்பினும் எங்கள் சொந்த பலத்தில் களம் காண்கிறோம்.
5. டெல்லியில் நாங்கள் கூட்டணி வைக்கத்தான் விரும்பினோம். அதற்கு முன்பாக அரியானா, பஞ்சாப் அரசியல் நிலவரத்தை ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் எங்கள் கண் முன் நிறுத்தி விட்டார். டெல்லில் அவரது கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்க ரெடி. ஆனால் அரியானா, பஞ்சாபில் எங்களால் முடியாது.
6. இந்தியாவில் 67 சதவீதம்பேர் ரஃபேல் என்பது ஊழல் என புரிந்து வைத்துள்ளனர். ஊழலுக்கு எதிராக போராடுபவர் என்ற பெயரை, மோடியிடம் இருந்து ரஃபேல் விவகாரம் நீக்கியுள்ளது.
7. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதாக கூறி நான் தவறான தகவலை தெரிவித்தேன். ஆனால் திருடன் என்று கூறியதற்காக மோடியிடம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.
8. மோடியால் 2014-ல் பேசியதை இப்போது பேச முடியாது. அவரது காலம் முடிந்து விட்டது.
9. இந்த தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம்தான் முக்கிய பிரச்னை. பொருளாதாரமும் முக்கிய சிக்கலாக உள்ளது. ஆனால் மோடி இதுபற்றியெல்லாம் பேச மறுத்து வருகிறார்.
10. வாரணாசியில் பிரியங்கா போட்டியிட மாட்டார் என்று முன்பே நாங்கள் அறிவித்து விட்டோம்.