This Article is From May 23, 2019

ஆந்திராவில் வெற்றி கொடி நாட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி!!

175 சட்டமன்றத் தொகுதிகளில் 136 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் வெற்றி கொடி நாட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி!!

ஹைலைட்ஸ்

  • 136 இடங்களில் முன்னிலையில் உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
  • 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 16 இடங்களை பெற்றுள்ளார்.
  • ஆந்திராவில் ஆட்சியமைக்க தயாராகிவிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 139 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. 

ஏழு கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வந்த நிலையில், தெலுங்கு தேச கட்சியை பின்னுக்கு தள்ளி ஒய்.எஸ்.ஆர் கட்சி முன்னிலையில் உள்ளது. 

175 சட்டமன்றத் தொகுதிகளில் 136 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.  தற்போதைய நிலவரப்படி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 88 இடங்கள் பெற்றுள்ளது.  இதன்மூலம், ஜெகன்மோகன் ரெட்டியிடம் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழக்கிறார். 

மேலும் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் 16 இடங்களை கைப்பற்றியுள்ளது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.  இந்தத் தேர்தல், சந்திரபாபு நாயுடுவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

.