This Article is From Apr 07, 2019

தமிழகத்தில் போட்டியிடும் துணிச்சல் மோடிக்கு உள்ளதா? சசி தரூர் கேள்வி

நாட்டில் வடக்கிற்கும், தெற்குகிற்கும் இடையே வளர்ந்து வரும் பிரிவை தடுக்க, தான் பாலமாக இருப்பார் என்று ராகுல் தைரியமான அறிக்கையை வெளியிட்டார் என்று சசி தரூர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் போட்டியிடும் துணிச்சல் மோடிக்கு உள்ளதா? சசி தரூர் கேள்வி

ராகுலின் வயநாடு முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மோடிக்கு சசி தரூர் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மேற்கு மற்றும் தெற்கில் வெற்றி பெரும் துணிச்சல் கொண்டுள்ளார் ராகுல்
  • ராகுலை விமர்சித்த மோடியை கடுமையாக விமர்சித்தார்
  • அமேதியை தவிர்த்து வயநாட்டிலும் ராகுல் போட்டியிடுகிறார்
Thiruvananthapuram:

வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் முடிவு, மேற்கு மற்றும் தெற்கில் வெற்றி பெறுவோம் என்ற அவரது துணிச்சலை காட்டுகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறினார்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழகம் அல்லது கேரளாவில் போட்டியிடும் துணிச்சல் உள்ளதா என்றும் அவர் சரமாரி கேள்வி எழுப்பினார்.

உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

ராகுலின் வயநாடு தொகுதி போட்டி முடிவால், அடுத்த பிரதமர் நமது மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார் என்ற பெரும் உற்சாகம் தென்னிந்திய மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று சசி தரூர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகம் வாழும் பகுதியில் போட்டியிட பயந்து ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு ஓட்டம் பிடித்ததாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதே கருத்தை பிரதமர் மோடியும் ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த கருத்து ஏமாற்றம் அடைய செய்கிறது என்றும், இந்தியாவின் பிரதமர் என்ற பதவி, இந்திய மக்கள் அனைவருக்குமே பொதுவான பதவி என்பதை மறந்துவிட்ட மோடி, பாஜகவின் கொள்கைகளை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதில் அக்கறை காட்டி வந்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டன. அதனால், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டும் என்பதற்காகவே வயநாடு பாராளுமன்ற தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளார்.

பிரதமர் மோடிக்கும் துணிச்சல் இருந்தால் ராகுல் காந்தியைப்போல் கேரளாவில் அல்லது தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். இதற்கான துணிச்சல் அவருக்கு உண்டா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

.