Read in English
This Article is From Mar 29, 2019

மக்களவை தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர், ஜஸ்வந்த் சிங்கின் மகன்கள் போட்டி!!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜோத்பூர் தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங் பார்மர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Advertisement
இந்தியா

மன்மோகன் சிங்கிடம் வாழ்த்துப் பெறும் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்

Jaipur:

மக்களவை தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங் ஆகியோரின் மகன்களை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இங்கு மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 19 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

அவர்களில் 10 பேர் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவர். மாநிலத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட்டின் மகனான 39 வயதாகும் வைபவ் கெலாட்டுக்கு ஜோத்பூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது தந்தை அசோக் கெலாட் 5 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

Advertisement

ஜோத்பூர் தொகுதியில் பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை எதிர்கொள்கிறார். இதேபோன்று காங்கிரசில் சேர்ந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன், தனது தந்தையின் சொந்த தொகுதியான பார்மரில் களம் காண்கிறார். 

இந்த தொகுதியில் ராஜ்புத் , தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகள் அதிகம். இதனால் அவர் வெற்றி பெறுவதற்கான வாயப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Advertisement
Advertisement