தென் சென்னை மக்களவை தொகுதியில் குப்பல்ஜி தேவதாஸ் போட்டியிடுகிறார்.
Chennai: தமிழகத்தில் மக்களவை கவர வேட்பாளர்கள் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கலுக்கு ரூ. 25 ஆயிரத்திற்கான சில்லறைகளை கொண்டு வந்தது கவனத்தை ஈர்த்தது.
தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக குப்பல்ஜி தேவதாஸ் என்ற சுயேச்சை வேட்பாளர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு டெபாசிட் செய்ய வேண்டிய ரூ. 25 ஆயிரம் தொகையை சில்லறையாக அவர் 13 பாத்திரங்களில் கொண்டு வந்தார்.
ரூ. 10, 5, 2, 1 ரூபாய் நாணயங்களை அவர் எடுத்து வந்தார். தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கு அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 23 ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.