This Article is From Mar 16, 2019

கருத்துக் கணிப்பால் அதிர்ச்சி!! டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பாரா ராகுல்?

டெல்லி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், பாஜகவுக்கு 35 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 28 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 22 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பால் அதிர்ச்சி!! டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பாரா ராகுல்?

டெல்லியில் 9 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

New Delhi:

கருத்துக் கணிப்பு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் ராகுல் காந்தி கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 

டெல்லி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது. உத்தர பிரதேசத்தில் மட்டும் ஏதாவது சிறிய கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி வரைக்கும் ராகுல் காந்தியிடம் இருந்து எந்தவொரு சிக்னலும் வரவில்லை. இதனால் பொறுமையிழந்த ஆம் ஆத்மி கட்சி 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிடும் என்பது ஓரளவு உறுதியாகி விட்டது.

 இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, டெல்லியில் பாஜகவுக்கு 35 சதவித வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 28 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 22 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தகவலை ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரசின் முன்னணி தலைவர்களாக இருக்கும் அகமது படேல், குலாம் நபி ஆசாத் ஆகியோர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடர்பில் உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளுக்கு மே 12-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறகிறது. நாடு முழுவதும் மே 23-ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 
 

.