Read in English
This Article is From Apr 15, 2019

தமிழக கட்சிகளின் வைரலாகும் சமூக வலைதள பிரசார வீடியோக்கள்

தமிழகத்தின் மிக முக்கிய 2 கட்சிகள் தங்களுடைய பிரச்சாரத்தை சமூக வலைதளங்கள் யூ ட்யூப் போன்ற போன்ற இணைய வெளிகளில் விதவிதமான வீடியோக்கள் மூலமாக இளையதலைமுறையினரை வெகுவாகக் கவர முயற்சி செய்து வருகின்றனர்.

Advertisement
இந்தியா
Chennai:

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு பிரச்சார இணைய வெளியெங்கும் வெகுவாக பரவியுள்ளது. 2 கோடி வாக்களார்கள் உள்ள நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய 2 கட்சிகள் தங்களுடைய பிரச்சாரத்தை சமூக வலைதளங்கள் யூ ட்யூப் போன்ற போன்ற இணைய வெளிகளில் விதவிதமான வீடியோக்கள் மூலமாக இளையதலைமுறையினரை வெகுவாகக் கவர முயற்சி செய்து வருகின்றனர். 

ஏப்ரல் 18 அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 23 ம் தேதி நடைபெறவுள்ளது. மு.க. ஸ்டாலின் தலைவராக இருந்து வருகிற திமுக கட்சியின் தங்களுடைய பிரச்சாரத்தை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக செய்து வருகிறது. 

திமுக கட்சியினர் இந்த ஆட்சிக்காலத்தில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, நீட் தேர்வினால் ஏற்பட்ட தற்கொலைகள், ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற பலவற்றை நினைவுபடுத்தும் வகையில் வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். 

Advertisement

ஆதிக்கவாதிகளும் வேண்டாம் அடிமைகளும் வேண்டாம் என்று மோடி ஆட்சியையும் தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும் மறுத்து திமுகவின் சின்னமான உதயசூரியன்  வருகிற விதத்தில்  பிரசார விளம்பரங்கள் அமைந்துள்ளது. 

ஆளும் கட்சியான அதிமுக முன்னள் முதலமைச்சர் ஜெயலலிதா பிரசார வீடியோக்களை போட்டு வாக்கு கேட்கின்றனர். 

Advertisement

Kayavar Tv spl Promo pic.twitter.com/GkFGpc72p6

அதிமுகவின் சமூக வலைதளத்திற்கான பணிபுரியும் சுவாமிநாதனிடம் பேசிய போது “உண்மைகளை நகைச்சுவையுடன் கற்பனைத்திறனுடன் கொடுக்கவே முனைகிறோம். மக்கள் திமுக கட்சிக்கு வாக்களிக்க கூடாது என்பதையும் வழியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தார். 

Advertisement

மற்றொரு சினிமாத்தனமான பிரச்சார வீடியோவை நடிகர்- அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ள கமல்ஹாசல் வெளியிட்டுள்ளார். நீட் தேர்வினால் இறந்த அனிதாவின் பெற்றோரிடம் கேளுங்கள் யாருக்கு ஓட்டு போடக்கூடாது என்பதை தெளிவாக கூறுவார்கள் என்று பேசுகிறார் கமல்.

Advertisement

திமுக செய்தித் தொடர்பாளர் சரவணனிடம் பேசிய போது, “ கமல்ஹாசன் பி.ஜே.பியின் பி டீம் என்பதை பலரும் அறிந்திருக்கிறார்கள். திராவிட அரசியலைப்பற்றி அவர் பேச முடியாது.ஒட்டுமொத்த நாடே பாசிச ஆட்சிக்கு எதிராக இருக்கிறது” என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி  இரண்டு மிகப்பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில் வரும் முதல் தேர்தலாகும். இந்த தேர்தல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுகவின் இடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர்களுக்கு அமிலச்சோதனை நிச்சயம் இருக்கும். 

Advertisement

Advertisement