This Article is From Apr 05, 2019

தமிழர்கள் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ.1 லட்சம் கடன் உள்ளது! - கமல்ஹாசன்

தமிழர்கள் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ.1 லட்சம் கடன் உள்ளது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ.1 லட்சம் கடன் உள்ளது! - கமல்ஹாசன்

தமிழர்கள் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ.1 லட்சம் கடன் உள்ளது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தென் சென்னை மக்களவை தொகுதியில் ஜனதா கட்சி சார்பாக ஜெபமணி மோகன் ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை அளித்துள்ளார்.

அதில், 2ஜி விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக பேசப்பட்டது. அந்த தொகை அளவுக்கு தன்னிடம் பணம் இருப்பதாக ஜெபமணி கூறியுள்ளார். தமிழக அரசின் கடன் சுமை ரூ. 3.97 லட்சம் கோடி உள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் அவர் தனக்கு ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு கடன் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் கூறியதாவது,

தமிழக அரசியல் சூழலில் நானும் மக்களும் தாமாக விழித்து கொண்டுள்ளோம். ஆனாலும் தகுந்த நேரத்தில் விழித்துள்ளோம். மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கி நாடு முழுவதும் ஏற்பட வேண்டும். பணத்துக்காக ஓட்டு போடாதீர்கள். ஒவ்வொரு தமிழன் தலை மீதும் ரூ.1 லட்சம் கடன் உள்ளது. இதை புரியாமல் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வாங்கி ஏமாந்து விடாதீர்கள்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் என தமிழகத்திலுள்ள 57 தெகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
 

.