திமுக தலைவர் ஸ்டாலின் தனது சகோதரி கனிமொழியை மக்களவை தேர்தலில் களம் இறக்கியுள்ளார்.
Chennai: தமிழக தேர்தல் களத்தில் இந்த முறையும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் திமுகவில் 7 பேரும், அதிமுகவில் 4 பேரும் போட்டியிடுகிறார்கள்.
அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளித்தது குறித்து வெளிப்படையாக ஏதும் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் புலம்பல் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவை பொறுத்தளவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் சகோதரியும், மறைந்த தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தூத்துக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக மூத்த தலைவர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மத்திய சென்னையில் போட்டியிடுகிறார்.
மற்றொரு மூத்த தலைவர் ஆர்காடு வீராசாமியின் மகன் டாக்டர். கலாநிதி வீராசாமி வட சென்னை தொகுதியிலும், தங்க பாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதுகுறித்து என்.டி.டி.வி.க்கு கலாநிதி அளித்த பேட்டியில், 'கடந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டடாலும், இல்லாவிட்டாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம்' என்றார்.
திமுகவின் முக்கிய கூட்டணி காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தளவில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் ஆகியோரும் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.