Read in English
This Article is From Apr 14, 2019

தெலுங்கானாவில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் புகைப்படம் எடுத்த டிஆர்எஸ் கட்சி முகவர் கைது

இந்தப் புகைப்படம் போக்ராமில் உள்ள புனித மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்களுக்கு மத்தியில் வைத்து எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

Advertisement
இந்தியா

 மர்ரி ராஜசேகர் ரெட்டியின் வாக்குபதிவு முகவர் என்.வெங்கடேஷ்

Hyderabad:

தெலுங்கானா ராஷ்டிர சமிதி வாக்குப்பதிவு முகவர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

ஏப்ரல் 11-ம் தேதி தெலுங்கானாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த முடிந்த நிலையில் மால்காஜிகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர்  மர்ரி ராஜசேகர் ரெட்டியின் வாக்குபதிவு முகவரான என்.வெங்கடேஷ் அறையில் நின்று புகைப்படம் எடுத்துக் காட்டியுள்ளார். 

இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் அறையில் வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.இந்த விதிமுறையை மீறி புகைப்படம் எடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் புகைப்படம் போக்ராமில் உள்ள புனித மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்களுக்கு மத்தியில் வைத்து எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறையினர் மட்டுமே இந்த அறைகளை புகைப்படம் எடுக்க அனுமதியுண்டு.

Advertisement

மால்காஜ்கிரி தொகுதியில் 31.50 லட்சம் தொகுதியில் வாக்காளர்கள் உள்ளனர். பல்வேறு விதமான மக்கள் உள்ள நிலையில் இதை ‘மின் இந்தியா' என்று அழைக்கின்றனர்,
 

Advertisement