This Article is From Apr 02, 2019

'எது வருமோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்':கவுதம் காம்பீருக்கு உமர் அப்துல்லா பதிலடி!!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். அவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ட்விட் செய்திருக்கிறார்.

'எது வருமோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்':கவுதம் காம்பீருக்கு உமர் அப்துல்லா பதிலடி!!

ட்விட்டரில் காம்பீர் தெரிவித்த கருத்துக்கு ட்விட்டரிலேயே உமர் அப்துல்லா பதில் கொடுத்துள்ளார்.

New Delhi:

''எது நமக்கு நன்றாக வருமோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஐ.பி.எல். தொடர்பான ட்விட்டுகளை மட்டுமே பதிவிடுங்கள்'' என்று கவுதம் காம்பீருக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். 

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் கடந்த மாதம் சேர்ந்தார். அவருக்கு இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து காம்பீர் ட்விட் ஒன்றை செய்தார். அதில், ''காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா காஷ்மீருக்கென்று தனி பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். நான் கடலில் நடக்க விரும்புகிறேன். உமர் காஷ்மீர் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார். நான் பறப்பதற்கு பன்றிகளை பயன்படுத்த விரும்புகிறேன். காஷ்மீர் பிரதமராக ஆக வேண்டும் என்று விரும்புவதற்கு பதிலாக ஸ்ட்ராங்கான காஃபியை குடித்து விட்டு உமர் உறங்கலாம்'' என்று கிண்டலாக கூறியிருந்தார். 
 


புதிதாக அரசியல் கட்சியில் சேர்ந்த பிரபலமான நபர் ஒருவர், இவ்வாறான ட்விட்டை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். 
 


அவர் தனது ட்விட்டர் பதிவில், '' கவுதம், நான் கிரிக்கெட் விளையாடியது கிடையாது. ஏனென்றால் அது எனக்கு ஒத்துவராது என்று நன்றாக தெரியும். அதேபோன்று காஷ்மீரின் வரலாற்றையும் அதில் எங்கள் கட்சியின் பங்களிப்பையும் பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியாது. உங்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஐ.பி.எல். பற்றி ட்விட் செய்யலாம்'' என்று கூறியுள்ளார். 

.