காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை இழிவுபடுத்தி விட்டதாக மோடி கூறியுள்ளார்.
Amroha, Uttar Pradesh: வாக்கு வங்கி அரசியல் நாட்டை சீரழித்து விட்டதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் புகைப்படைத்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வைக்க விடாமல் செய்தது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
வாக்கு வங்கி காரணமாக அம்பேத்கரை நினைவுபடுத்தும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. மற்றபடி, அந்தக் கட்சி அம்பேத்கரின் புகைப்படத்தை ஆண்டுக்கணக்கில் நாடாளுமன்றத்தில் வைக்க விடாமல் செய்திருந்தது.
நாட்டை இந்த வாக்கு வங்கி அரசியல் சீரழித்து விட்டது. மேற்கு உத்தர பிரதேச பகுதியில் ரவுடியிசம் தலை தூக்கி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக இங்கு சட்டம் ஒழுங்கு இல்லை.
சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, ரவுடிகள் அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டு கிரிமினல் குற்றங்கள் நடந்தன. ஆனால் பாஜக ஆட்சியில் அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு மோடி பேசினார்.