This Article is From Apr 23, 2019

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது: பிரதமர் மோடி

Narendra Modi: பிரதமர் மோடி, வாக்களித்ததை தொடர்ந்து, தனது மை வைத்த விரலை உயர்த்தி காட்டியபடி சிறுது தூரம் நடந்து சென்றார்.

Lok Sabha elections 2019: அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

ஹைலைட்ஸ்

  • அகமதாபாத்தில் வாக்களித்த பின் தனது தாயை சந்தித்தார் மோடி
  • மக்களுக்கு கை அசைத்த படி வாக்குச்சாவடிக்கு சென்றார்.
  • மை வைத்த விரலை உயர்த்தி காட்டினார்.
Ahmedabad:

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் ராணிப்பில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்தப்பின் பிரதமர் நரேந்திர மோடி தனது மை வைத்த விரலை உயர்த்தி காட்டியபடி சிறுது தூரம் நடந்து சென்றார்.

குண்டுதுலைக்காத கார்களை வருவதை தவிர்த்த பிரதமர் மோடி, திறந்த வாகனத்தில் மெதுவாக ஊர்வலம் போல் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார்.

வாக்குச்சாவடிக்குள் செல்வதற்கு முன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு திறந்த வாகனத்தில் கை அசைத்தப்படியே வந்தார். பிரதமர் மோடியுடன், பாஜக தலைவர் அமித்ஷா அவரது குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தார்.

qkse4ch8

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது,

நல்ல எதிர்காலத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது. பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதை போல ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது வாக்களர் அட்டை. வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும்.

எனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்ததன் மூலம் நான் அதிஷ்டசாலி ஆனேன். கும்பமேளாவில், புனித நீராடினால் தூய்மை அடைவதை போல் வாக்களிப்பதன் மூலம் வாக்காளர் அதை உணரலாம்.

வாக்களித்ததன் மூலம் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

.