“காவி என் நிறமல்ல” -கமலஹாசன்
New Delhi: அரசியல்வாதியாய் உருவெடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனிடம் NDTV எடுத்த நேர்காணலில் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரஸ் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவர் தான் வெற்றி காண முடியும் என்ற நிலையில், இந்நிலையில் தன்னுடைய ஆதரவு நிபந்தனைகளுடன் இருக்கும் என்ற தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டின் பிரச்னைகளைக் கவனிக்கிற அல்லது குறைந்த பட்சம் தமிழ்நாட்டின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்கிற கட்சியை விரும்புகிறோம். எங்களுக்கான நேரம் என்பது வரும் அதற்குமுன் எங்களை நாங்களே விற்கப்போவதில்லை” என்று தெரிவித்தார்
மக்கள் நீதி மய்யம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 64 வருடங்களாக இருக்கும் இரண்டு தேசிய கட்சிகளில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் எனக் கேட்ட பொழுது, “நாங்கள் இரண்டு கட்சிகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்றாவது தேர்வாக நாங்கள் உருவாக விரும்புகிறோம். தற்போது பிராந்தியக் கட்சியாக இருக்கிறோம் என்பதையும் அறிவோம்” என்றார்.
இதற்கும் முன்பு கமல்ஹாசன் “காவி என் நிறமல்ல” என்று கூறியிருந்தார். தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவு கொடுத்தாலும் கூட அது அ இஅதிமுகவுக்கான ஆதரவாக இருக்காது என்றார். நான் தமிழ்நாட்டை ஆதரிக்கிறேன்… (பாஜகவை ஆதரித்தால் ) தற்போது பாஜக தமிழ்நாட்டை எப்படி கையாளுகிற நிலையைப் பார்த்தால் நாங்கள் சில சங்கடமான கேள்விகளை கேட்க வேண்டி வரும் என்று தெரிவித்தார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினைத் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். திராவிட கட்சியான திமுக - அதிமுகவுடன் எந்தவொரு கூட்டணி உடன்பாடும் வைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். மோடியை “செல்வந்தரின் பாதுகாவலர் “ என்று கூறியிருந்
நான் மிகப்பெரிய பெரிய அடியை எடுத்து வைத்துள்ளேன். என் கோபம்தான் அரசியலுக்குள் பிரவேசிக்க வைத்தது. பிரதமரை தேர்வு செய்வதற்காக இந்த தேர்தலுக்கு அடியெடுத்து வைக்கவில்லை. எங்களின் நிலையை உறுதியை வெளிப்படுத்த இந்த தேர்தலை முக்கியமான ஒன்றாக பார்க்கிறோம்.
தமிழ்நாடு அரசியலில் இரண்டு உயர்மட்ட தலைவர்களான, ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் இல்லாத நிலையில் வரும் முதல் தேர்தல் என்பதால் அந்த வெற்றிடத்தை புதிய அரசியல் கருத்துகளால் நிரப்ப விரும்புகிறோம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. கமல்ஹாசன் தன்னுடைய பேச்சை வாக்காக நிச்சயம் மாற்றுவார். அரசியலில் புதிய உயரங்களை தொடுவார் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று நடைபெறும்.