This Article is From Mar 15, 2019

தேர்தலில் போட்டியிட 41% பெண்களுக்கு வாய்ப்பு - வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா

Trinamool Congress Candidate List 2019: மேற்கு வங்க தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் 41 சதவீதம் பெண்களுக்கு மம்தா பானர்ஜி வாய்ப்பு அளித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட 41% பெண்களுக்கு வாய்ப்பு - வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா

Trinamool Congress candidates list: வேட்பாளர் பட்டியலுடன் மம்தா பானர்ஜி

Kolkata:

மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை (trinamool congress candidate list) கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். இதில் 41 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தற்போது எம்.பி.யாக இருக்கும் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜகான் போன்ற பிரபலங்கள் தேர்தலில் போட்டியிட மம்தா சீட் வழங்கியுள்ளார். 

மம்தா கட்சி எம்.பி.க்களின் பேராசிரியர் சுகதா போஸ் குறிப்பிடத் தகுந்தவர். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட கல்லூரிநிர்வாகம் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

அவருக்கு பதிலாக வங்காள நடிகை மிமி சக்ரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மற்றொரு பிரபல நடிகை நுஸ்ரத் ஜகானும் மம்தா கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். பசிராத் தொகுதியில் இத்ரிஷ் அலிக்கு மாற்றாக களம் இறக்கப்பட்டுள்ளார். 

ஹவுரா தொகுதியில் போட்டியிட அர்ஜுனா விருது பெற்றவரும், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டனுமான பிரசுன் பானர்ஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பீர்பம் தொகுதி எம்.பி.யாக இருக்கும் நடிகை சதாப்தி ராய் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். 
 

viai2qh8

(படத்தில் இடமிருந்து) நுஸ்ரத் ஜகான், தேவ், மிமி சக்கரவர்த்தி

முன்னாள் நடிகை மூன் மூன் சென்னுக்கு அசனோல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக அமைச்சர் பாபுல் சுப்ரியோவை எதிர்த்து அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி காணப்படுகிறது. காங்கிரசும் - இடதுசாரி கட்சிகளும் இங்கு கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மேலும் படிக்க:  ''மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம்'' - நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி
 

.