Read in English
This Article is From Apr 02, 2019

கேரளாவில் போட்டியிடுவது ஏன்? - ராகுல் காந்தி விளக்கம்!!

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்ததால் வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்
  • தென்னிந்தியாவுக்கு முக்கியத்தும் அளிப்பதாக ராகுல் கூறியுள்ளார்
  • காங்கிரஸ் தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
New Delhi:

கேரளாவில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில்தான் ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிட்டு வருகிறார். இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாட்டை அவர் போட்டியிடும் 2-வது தொகுதியாக தேர்வு செய்துள்ளார். 

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் கேரளாவில் இடதுசாரிகளை எதிர்த்து களம் காண்கிறது. வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதை இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ராகுலின் முடிவு குறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி, இந்துக்களை காங்கிரஸ் கட்சி இந்து தீவிரவாதம் என்று கூறி அவமதித்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதனால் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்கள் அச்சம் கொள்வதாக அவர் விமர்சித்திருந்தார். 

Advertisement

இந்த நிலையில், தென்னிந்தியாவில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று பேசுகையில், ''பிரதமர் மோடியால் தென்னிந்தியா அச்சத்தில் இருக்கிறது. நாட்டின் முக்கிய முடிவுகளில் தாங்கள் பங்கு வகிக்கவில்லையோ என்று தென்னிந்திய மக்கள் எண்ணுகின்றனர். 

காங்கிரஸ் கட்சி தென்னிந்திய மக்களுடனும் இருக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.  இதனால்தான் வயநாட்டில் போட்டியிட முடிவு எடுத்தோம். அங்கு சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.'' என்றார். 

Advertisement
Advertisement