This Article is From Apr 13, 2019

இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18! - ப.சிதம்பரம்

இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Written by

முன்னதாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய ரயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் கூறியதாவது, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரின் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டண கொள்ளைக்காகவே நீட் தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்யமாட்டோம். நீட் தேர்வு தமிழில் நடத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு உள்ளோம்.

நீட் தேர்வு ரத்து குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. அப்படி கூறியிருந்தால், அதிமுகவை சமாதானம் செய்வோம் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

Advertisement

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியிட அதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்கிறது கூட்டணி கட்சியான பாஜக. அதோடு, அதிமுகவை சமாதானம் செய்வோம் என்று கூறியது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, 'நீட்' தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்து விட்டன.

Advertisement

யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது. காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18.

மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement