மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாக்குப்பதிவு நேரம் 8 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் முடிந்துள்ளது.
இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் இரண்டாம் கட்டத்தின் கீழ் தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குபதிவு நடைப்பெறுகிறது. வேலூரில் நடகக்விருந்த தேர்தல் ரத்தாகியுள்ளது. இதனால் 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உயிரிழந்தது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இடத்தை ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடமும், மறுப்பக்கம் மு.க.ஸ்டாலினிடமும் விட்டுச்சென்றுள்ளனர்.
இரண்டாக உடைந்த அதிமுக அணியில் ஒரு அணியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் மற்றொரு அணியாக சசிகலா, டிடிவி தினகரன் இருக்கின்றனர். இதில் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே.நகரிலே தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்களது அணியே உண்மையான அதிமுக என டிடிவி தினகரன் கூறிவருகின்றனர்.
அசாம், பிகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடக, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கோளாறு ஏற்பட்டதால் 384 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள், 692 ஒப்புகை சீட்டு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த வாக்குப்பதிவு நிலவரம் மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாலை 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கரூரில் அதிகபட்சமாக 56.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் குறைந்த பட்சமாக 45.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இடைத்தேர்தலில் 55.97% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடைசியாக மாலை 7 மணி நிலவரப்படி, 38 மக்களவை தொகுதிகளுக்கு, 69.55 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
2014 மக்களவை தேர்தலில் பாஜக கட்சி சார்பாக போட்டியிட்ட பொன்.இராதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஹெச்.வசந்தகுமாரை 1,28,662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொன்.இராதாகிருஷ்ணனுக்கு 3,72,906 வாக்குகளும் ஹெச்.வசந்தகுமாருக்கு 2,44,244 வாக்குகளும் பதிவாகின. தற்போது நிதி அமைச்சகம் மற்றும் கப்பல் அமைச்சகத்தின் இணையமைச்சராக செயல்படுகிறார்.
2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக கட்சியின் ஹெலன் டேவிட்சன், பாஜகாவின் பொன்.இராதகிருஷ்ணனை 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். கடந்த முறை போல் இந்த முறையும் பாஜகவின் பொன்.இராதாகிருஷ்ணனுக்கும் காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமாருக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும் என எண்ணப்படுகிறது.
வாக்குபதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அசாம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது.
சத்திஸ்கரில் வாக்குசாவடி அதிகாரி ஒருவர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். 186 வது வாக்குசாவடியில் இருந்த சுகுல் ராம் சிங்கே தான் அந்த வாக்குசாவடி அதிகாரி.
அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன், தனது வாக்கை பதிவு செய்தார்.
ஈரோட்டில் வாக்குப்பதிவு மந்தம் : காலை 9 மணி நேர நிலவரப்படி மொத்தமே 1.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.8% வாக்குகள் பதிவு!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்
மத்திய சென்னையில் திமுகவின் கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார். அவர், தூத்துகுடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடுகிறார்.
இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழக முதல்வர் திரு.பழனிசாமி, சேலத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தன் மகள் ஷ்ருதிஹாசன் உடன் வரிசையில் நின்ற்யு வாக்களித்தார்.
நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ரங்கராஜன் ஆகியோர் சிவகங்கையில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னையில் ரஜினிகாந்த் தன் வாக்கை பதிவு செய்தார்.
தமிழ்நாட்டில் இன்று 38 மக்களவை தொகுதியிலும் 18 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது.
நான்கு மத்திய மந்திரிகளும் முன்னாள் பிரதமர் தேவகவுதாவும் இன்றைய தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
அசாம், பிகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடக, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று தேர்தல் நடக்கிறது.