9 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ஒடிசா, பிகார், ஜார்கண்ட், ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
ஏழு கட்டங்களில் நடக்கும் மக்களவை தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
5 மணி வரை மகாராஷ்டிராவில் பதிவான வாக்கு சதவிகிதம்
மும்பையில் தனது வாக்கினை பதிவு செய்தார் தீபிகா படுகோன்
மத்திய பிரதேசத்தில் நடக்கும் 6 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தலில், மாலை 4 மணி வரை 55.31 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் உறவினர்கள், பத்திரிகையாளர்களை தாக்குகின்றனர் என்று தேஜஸ்வி யாதவ் ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
4-ம் கட்ட தேர்தல்: 3 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதம்
நான்காம் கட்ட மக்களவை தேர்தல்: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்
சிவசேனா தலைவர் உதேய் தாக்கரே, தன் மனைவி மற்றும் மகனுடன் வாக்களித்தார்.
கஜ் சிங், தன் வாக்கை பதிவு செய்தார்.
மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த மகேந்திரா, தன் வாக்கை பதிவு செய்தார்.
11 மணி வரை அதிக பட்சமாக மேற்கு வங்காளத்தில் 34.7 சதவிகிதம் வாக்குகளும் குறைந்தபட்சமாக ஜம்மு மற்றும் காஷ்மிரில் 3.8 சதவிகிதம் வாக்குகளும் பதிவு.
மூதாட்டி வாக்களிக்க உதவி செய்யும் பாதுகாப்பு வீரர்
மகாராஷ்டிராவின் முதலமைச்சரான கமல் நாத், சிந்திவாலாவில் வாக்களித்தார்.
தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வந்து வாக்களித்தார் கமல்நாத்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நடந்த சண்டையில் மத்தியமைச்சர் பாபுல் சுப்ரியோவின் கார் சேதப்படுத்தப்பட்டது
மேற்கு வங்காளத்தில் ஒன்பது மணி வரை 16.9 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தென் மும்பையில் காங்கிரஸ் கட்சியின் மிலிந்த தியோரா சிவ சேனா கட்சியின் அர்விந்த் சாவாந்தை எதிர்கொள்கிறார்.
பாலிவுட் நடிகையான ரேகா, பாண்ட்ரா வாக்குசாவடியில் வாக்களித்தார்
ஆர்பிஐ கவ்ர்னரான ஷக்திகந்தா தாஸ் மும்பையில் வாக்களித்தார்
அனில் அம்பானி தனது வாக்கை பதிவு செய்தார். அவர் மும்பையின் கப்பே பரதேயில் வாக்களித்தார்
பிகாரின் தர்பாங்காவின் வாக்குசாவடியில் இருந்து புகைப்படம். காலை 7 மணிக்கு வாக்குபதிவு துவங்குகிறது.
இன்று தேர்தலை சத்திக்கும் 72 தொகுதிகளில் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக கட்சி 45 தொகுதிகளையும் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளையும் வென்றன. ஏனைய கட்சிகளான பிஜேடி (6 தொகுதி), திரிணாமுல் காங்கிரஸ் (ஆறு தொகுதிகள்), சமாஜ்வாதி கட்சி (ஒரு தொகுதி) வென்றது.
12.79 கோடி வாக்காளர்கள் இன்று தங்களது வாக்கினை பதிவு செய்வார்கள். 972 வேட்பாளர்கள் இன்று போட்டியிடுகிறார்கள்.