ராகுல் மற்றும் பிரியங்கா இடையில் சோனியா (62) அமர்ந்திருந்தார்.
Raebareli, Uttar Pradesh: உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு பிராத்தனையில் ஈடுபட்டார். அப்போது, அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதேபோல், இந்த பிராத்தனையில் பிரியங்கா காந்தியின், மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் உடன் இருந்தனர்.
அதில் சோனியா ஒரு சிறு நாற்காலியில் அமர்ந்திருக்க அவருக்கு இருபுறமும் சோனியாவும், ராகுலும் அமர்ந்திருந்தனர். முன்னாள் காங்கிரஸ் தலைவரான சோனியா தனது உடல்நலன் காரணமாக அரசியல் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை குறைத்து வருகிறார்.
மேலும், காந்தியின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி காலம் முதல் தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த முறை சோனியா முழு நேர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், அவருக்கு பதில் அவரின் மகள் பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் வதந்திகள் பரவி வந்தன.
முன்னதாக, நேற்று ராகுல் அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போதும் அவருடன் சோனியா சென்றார். வேட்பு மனு தாக்கலுக்கு ராகுல் பிரசாரமாக சென்றார். இந்த பிரசாரத்தில் கலந்து கொள்ளாத சோனியா நேராக அலுவகத்திற்கு வருகை தந்தார்.
இதேபோல், ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இராணியும் அவரது கணவர் சுபின் இராணியுடன் வேட்பு மனு தாக்கலின் போது சிறப்பு பூஜையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.