This Article is From Mar 31, 2019

வயநாட்டில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம்: பிராகாஷ் காரத் உறுதி

இடதுசாரிகளை எதிர்கொள்ள ராகுல் போன்ற வேட்பாளர்களை களம் இறக்குகிறார்கள் என்றால், கேரளாவில் காங்கிரஸ் இடதுசாரிகளையே குறிவைக்கிறது என்பதே அர்த்தம் என சிபிஎம் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம்: பிராகாஷ் காரத் உறுதி

ராகுல் காந்தியை நிச்சயம் தோற்கடிப்போம் என பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • 2வது தொகுதியாக வயநாட்டில் போட்டியிடுகிறார் ராகுல்.
  • இடதுசாரிகளை காங்கிரஸ் குறிவைத்தால், எதிர்கொள்வோம்.
  • ஏப்.23ல் வயநாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
New Delhi:

கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்ற அறிவிப்பு, அம்மாநிலத்தை ஆளும் சிபிஎம் அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சிபிஎம் கட்சியானது மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் எதிர்கட்சிகள் கூட்டணியில் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது.

எனினும் இதுகுறித்து அந்த மாநில சிபிஎம் கட்சியிடம் எந்த கருத்தும் வராத நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறும்போது, வயநாட்டில் ராகுல்காந்தியை உறுதியாக தோற்கடிப்போம் என்று கூறியுள்ளார். சிபிஎம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளர் சுனீர் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

வடக்கிற்கும் தெற்கிற்கும் பிரிவினையை ஏற்படுத்தும் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு எதிராக காங்கிரஸ் தெற்கில் போட்டியிடுவதாக முக்கிய அறிவிப்பை இன்று காலை வெளியிட்டது. இதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் வழக்கமாக போட்டியிடும் தனது குடும்ப தொகுதியான அமேதியை தவிர்த்து, இரண்டாவது தொகுதியாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

ஆனால் ராகுல் காந்தியின் இந்த முடிவால் சிபிஎம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இடதுசாரிகளை எதிர்கொள்ள ராகுல் போன்ற வேட்பாளர்களை களம் இறக்குகிறார்கள் என்றால், கேரளாவில் காங்கிரஸ் இடதுசாரிகளையே குறிவைக்கிறது என்பதே அர்த்தம் என சிபிஎம் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது ஆச்சரியம் இல்லை. அவர் பாஜகவை எதிர்த்துபோட்டியிடவில்லை, இடதுசாரிகளை எதிர்த்து போட்டியிடுகிறார். எனினும், நாங்களும் காங்கிரசுக்கு கடும் போட்டியாக இருப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

.